லாரிகள் வேலைநிறுத்தம்: ஈரோட்டில் ரூ.200 கோடி அளவிலான பொருள்கள் தேக்கம்
லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் ரூ. 200 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.
லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் ரூ. 200 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்துள்ளன.
டீசல் விலை உயர்வு, நீண்ட நாள்களாக இயங்கும் சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஜூலை 20 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு, நரிப்பள்ளம் பகுதியில் நிறுத்தப்பட்ட லாரிகளின் ஓட்டுநர்கள் ஓய்வு எடுத்தபடி, உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். லாரிகள் வேலை நிறுத்தத்தால் வெளியூருக்கு செல்லும் சரக்குகள் முற்றிலும் தேங்கியுள்ளன.
மஞ்சள், எண்ணெய், ஜவுளி உள்பட ரூ. 200 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்துள்ளன. போராட்டம் தொடர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடுக்கு வெளியூர்களிலிருந்து வரும் காய்கறிகள் வரத்து நிறுத்தப்பட்ட நிலையில், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.