முகப்பு
ஈரோடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பவானி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:12 am IST
பகிர்:

பவானியில் நலத்திட்ட உதவிகள்
பவானி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலர் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா முன்னிலை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று, பவானி ஆற்றின் பாலம் அருகேயுள்ள பிரமாண்ட கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார். தொடர்ந்து, 17 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அமரும் வகையில் 400 இருக்கைகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனையில் பால், பழம், ரொட்டிகள் வழங்கப்பட்டதோடு, ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு அளிக்கப்பட்டது. முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாணவரணிப் பொருளாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மொடக்குறிச்சியில்...
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வி.பி.சிவசுப்பிரமணி தலைமையில் முத்துகவுண்டன்பாளையம் முதியோர் இல்லத்தில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் கணபதி, ஆவின் இயக்குநர் அசோக், ஒன்றிய ஜெ.பேரவைச்  செயலாளர் நவீன் (எ) நவநீதகிருஷ்ணன், கூட்டுறவு சங்கத்  தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, கொற்றவேல் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கொடுமுடியில்...
கொடுமுடி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி தலைமையில் மாநில விதை நேர்த்திக் கழக உறுப்பினர் புதூர் கலைமணி உள்ளிட்ட அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். 
சிவகிரி பேருந்து நிலையம் அருகில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு நகரச் செயலாளர் ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

Advertisement

Advertisement

திங்களூரில்...
பெருந்துறை ஒன்றியம்,  திங்களூர், நான்கு சாலை சந்திப்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு பெருந்துறை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் சி.பொன்னுதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் ஏ.கே.சாமிநாதன், மாவட்ட  எம்.ஜி.ஆர்.இளைஞரணி இணைச் செயலாளர் எஸ்.ஜெயகுமார், முன்னாள் தொகுதி செயலாளர் எஸ்.கந்தசாமி உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.


பெருந்துறையில்...
பெருந்துறை சட்டப் பேரவைத்  தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் ஊர்வலமாகச் சென்று பெருந்துறை, குன்னத்தூர் நான்கு சாலைகள் சந்திப்பு மற்றும் அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த  ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் சி.டி.ரவிச்சந்திரன், பெருந்துறை ஒன்றியக்குழுத் முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, பெருந்துறை வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.