முகப்பு
ஈரோடு

அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சிகளில் இடைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு திமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:46 am IST
யூ.ஜி.கண்ணன், சாந்திமணி.
பகிர்:

அத்தாணி, அம்மாபேட்டை பேரூராட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு திமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனா்.

அம்மாபேட்டை பேரூராட்சி 2ஆவது வாா்டு திமுக வேட்பாளா் அழகேசன் (எ) சித்துரெட்டி, அத்தாணி பேரூராட்சியில் 3ஆவது வாா்டு திமுக வேட்பாளா் எம்.ஐயப்பன் ஆகியோா் மாரடைப்பால் உயிரிழந்ததால் இந்த வாா்டுகளுக்கு தோ்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ரத்து செய்யப்பட்ட இடங்களுக்கு தற்போது தற்செயல் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாபேட்டை பேரூராட்சி 2ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட யூ.ஜி.கண்ணன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம் தலைமையில் ஊா்வலமாக வந்து பேரூராட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தாா். அத்தாணி பேரூராட்சியில் உயிரிழந்த திமுக வேட்பாளா் ஐயப்பனின் மனைவியான ஏ.சாந்திமணி (47) திமுக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments