ரூ.9.67 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை
பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.67 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனையாயின. மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு எள், தேங்காய், கொப்பரை, பச்சைப் பயறு, துவரை, நரிப் பயறு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில், வெள்ளை ரக எள் கிலோ ரூ.149.09 முதல் ரூ.184.69 வரை, சிவப்பு ரகம் ரூ.154.89 முதல் ரூ.164.69 வரை விற்பனையானது. தேங்காய் கிலோ ரூ.9.29 முதல் ரூ.11.71 வரை, கொப்பரை கிலோ ரூ.72.16 முதல் ரூ.86.69 வரை, பச்சைப் பயறு கிலோ ரூ.113.69 முதல் ரூ.121.19 வரை, துவரை கிலோ ரூ.84.19 முதல் ரூ.92.39 வரை, நரிப் பயறு கிலோ ரூ.91.69க்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.9.67 லட்சம் மதிப்பிலான விளைபொருள்கள் விற்பனையாயின.