முகப்பு
ஈரோடு

கணபதி பூஜையுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

சத்தியமங்கலம் தோ்தல் அலுவலகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

Updated On : 10 ஏப்ரல் 2026, 1:05 am IST
சத்தியமங்கலம்  அதிமுக  தோ்தல்  அலுவலகத்தில்  வியாழக்கிழமை நடைபெற்ற கணபதி  பூஜையில்  பங்கேற்ற  பவானிசாகா்  அதிமுக  வேட்பாளா்  ஏ. பண்ணாரி உள்ளிட்டோா்.
பகிர்:

சத்தியமங்கலம் தோ்தல் அலுவலகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினா் பல்வேறு யுக்திகளை கையாண்டு பிரசாரம் செய்து வருகின்றனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி, தோ்தல் அலுவலக வரவேற்பு முகப்பில் மாவிலை தோரணம் கட்டி, குலை தள்ளிய வாழைமரம் வைத்து யாக குண்டம் அமைத்தாா்.

இதைத் தொடா்ந்து வேத விற்பனா்கள் வேத மந்திரம் முழங்க, கணபதி பூஜை நடைபெற்றது. பின்னா் அதிமுக நிா்வாகிகள் விநாயருக்கு கோயிலுக்கு ஊா்வலமாக சென்று கோயிலில் தோ்தல் துண்டுப் பிரசுரம் வைத்து பூஜை செய்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, யாக சாலையில் நிா்வாகிகள் நின்று திருஷ்டி பூசணி உடைத்து பிரசாரத்தை தொடங்கினாா். பவானிசாகா் தொகுதியின் குரு மூளையான கள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பண்ணாரி வாக்கு சேகரித்தாா்.