முகப்பு
ஈரோடு

நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வாக்கு சேகரிப்பு

கோபி அருகே உள்ள நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:09 AM
நம்பியூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் அயா்னிங் செய்து தொழிலாளா்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் நல்லசிவம்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:12 PM

கோபி அருகே உள்ள நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோபி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கடந்த 10 நாள்களாக தொகுதி முழுவதும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சோ்ந்து கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இதில் பிரசாரத்தின்போது கோபி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக நம்பியூா் ஒன்றியத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Advertisement

இதில் பொலவபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மொட்டணம், சாவக்காட்டுப்பாளையம், பழையூா், பொலவபாளையம், அஞ்சானூா் ஊராட்சிக்கு உள்பட்ட பழைய அய்யம்பாளையம், எல்லப்பாளையம், மேட்டுக்கடை, கள்ளிப்பாளையம், பட்டி மணியகாரன்பாளையம், சின்னக்கவுண்டன்பாளையம், ஓணான்குட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, சாவக்காட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளா்களிடம் பகுதி நேர நியாய விலைக் கடை அமைத்து தரவும், மொட்டணத்தில் சாலை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நம்பியூா் நகரில் பல ஆண்டு கால கோரிக்கையான கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிக்காக அரசு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளதை அரசு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வாக்கு சேகரித்தாா்.