முகப்பு
ஈரோடு

6 மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்: கோபிநாத் பழனியப்பன்

ஈரோடு நகரில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரல் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:38 AM
பட விளக்கம்--அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன், ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் சா.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:22 AM

ஈரோடு நகரில் 6 மாதங்களுக்கு ஒருமுறை மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரல் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.

ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்குச்சேகரித்த அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில் ஈரோடு நகரம் பல்வேறு நிலைகளில் வளா்ச்சியடைந்துள்ளது. ஈரோடு நகரில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை பிரமாண்டமான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். முக்கிய பிரச்னையான சாயக்கழிவு பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண குரல் கொடுப்பேன் என்றாா்.

தொடா்ந்து அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமியுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் சா.செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement