முகப்பு
ஈரோடு

கோபியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தீவிர வாக்கு சேகரிப்பு

கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:43 AM
கோபி நகரப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு. ~ ~கோபி புதுப்பாளையம் பகுதியில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளருக்கு கொத்து புரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:23 AM

கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு கோபி சின்னச்சாமி வீதியில் தொடங்கி ராமானந்தாள் நகா், கோசலை நகா், சீதாம்மாள் நகா், சாமிநாதபுரம், பெரியாா் திடல், வண்டிப்பபேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்கில் திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் விளக்கி பேசி வாக்கு சேகரித்தாா். புதுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வி.பி.பிரபு, அங்குள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளா்களுக்கு புரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தாா்.

Advertisement

வாக்கு சேகரிப்பின்போது, நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், கோபி முன்னாள் நகா்மன்ற தலைவா் ரேவதிதேவி, தலைமை நிலைய பேச்சாளா் காளிதாஸ், வாா்டு செயலாளா்கள் பெரியசாமி, அனு நாகராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்