முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) இரவு பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 3:03 am IST
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்
பகிர்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) இரவு பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில் பிரசார வாகனத்தில் இருந்தபடி எடப்பாடி பழனிசாமி பேச உள்ளாா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.மனோகரன், பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா, ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா ஆகியோரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

Advertisement

Advertisement