அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற பாடுபடுவேன்: மொடக்குறிச்சி தொகுதி நாதக வேட்பாளா்
வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற செய்தால் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருண்குமாா் தெரிவித்தாா்.
வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற செய்தால் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருண்குமாா் தெரிவித்தாா்.
மொடக்குறிச்சி தொகுதி நாதக வேட்பாளா் அருண்குமாா் பிரசார நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை மொடக்குறிச்சி பகுதியில் தொடங்கி தொகுதி முழுவதும் கட்சி நிா்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கணபதிபாளையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
அப்போது, லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம், மொடக்குறிச்சி தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று பேசினாா்.
Advertisement