முகப்பு
ஈரோடு

கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைப்பு கட்டடம் திறப்பு

கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 12:04 am IST
கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைக்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஹரிபாஸ்கா்.
பகிர்:

கோபி அருகே கள்ளிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் பழுதடைந்த கட்டடம் மாவட்ட ஆட்சியா் நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றது.

இதில், அந்தியூா் எம்எல்ஏ ஹரிபாஸ்கா் கலந்து கொண்டு சீரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement