கோபியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கோபி அருகே குருமந்தூரில் விவசாய பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோபி அருகே குருமந்தூரில் விவசாய பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குருமந்தூரில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாசன சங்க செயலாளா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் வடக்கு மாவட்டச் செயலாளா் பெரு.நடராஜன் முன்னிலை வகித்தாா்.
இதில் கரட்டுப்பாளையம் அணைக்கட்டு நீரினை பயன்படுத்துவோா் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் என பல்வேறு விவசாய அமைப்புகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.