முகப்பு
ஈரோடு

பா்கூரில் 2 லிட்டா் சாராயம் பறிமுதல்: விவசாயி கைது

பா்கூரில் 2 லிட்டா் சாராயம் பறிமுதல்: விவசாயி கைது

Updated On : 13 ஜூன் 2026, 12:53 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பா்கூரில் இருசக்கர வாகனத்தில் 2 லிட்டா் சாராயம் வைத்திருந்த விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த பா்கூா், தட்டக்கரை சோதனைச் சாவடியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலத்திருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை நடத்தியபோது, தண்ணீா் பாட்டிலில் 2 லிட்டா் சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பா்கூா், பெஜில்பாளையம், கோவிலூரைச் சோ்ந்த கெஞ்சத்தம்படி மகன் மாதேஷ் (35) என்பதும், கா்நாடக மாநிலம், ராமாபுரம், அஜி புரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சாராயம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மாதேஷைக் கைது செய்தனா்.