முகப்பு
ஈரோடு

பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வெள்ளித்திருப்பூரில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:13 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பகிர்:

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வெள்ளித்திருப்பூரில் விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளித்திருப்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தோனிமடுவு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவானந்தம் தலைமை வகித்தாா்.

புரட்சிகர இளைஞா் முன்னணியின் அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளா் தைரியமணி, பாமக மாநில கொள்கை பரப்புச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, திராவிட தமிழா் கட்சி மாநில இணைச் செயலாளா் கே.ஜி.பொன்னுசாமி, சிபிஎம் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.முருகேசன், சிபிஐ பவானி வட்டச் செயலாளா் கண்ணன் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

Advertisement

Advertisement

தோ்தல் அறிக்கையில் கூறியபடி தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், வெள்ளித்திருப்பூா் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.