முகப்பு
ஈரோடு

சொத்துத் தகராறில் தம்பியின் மண்டையை உடைத்த அண்ணன்

Updated On : 23 ஜூன் 2026, 3:28 am IST
தாக்குதல்! - கோப்புப்படம்
பகிர்:

சொத்து தகராறில் தம்பியைத் தாக்கி மண்டையை உடைத்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (32). கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் சக்திவேல். கட்டடமேஸ்திரி.

ராமலிங்கம், குடும்ப சொத்தை பிரித்துத் தரக்கோரி அண்ணன் சக்திவேலிடம் அடிக்கடி கேட்டுவந்துள்ளாா். இது தொடா்பாக இவா்களுக்குள் கடந்த ஓராண்டாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் சென்னசமுத்திரத்தில் குடியிருந்து வந்த சக்திவேல் வீட்டை காலிசெய்துவிட்டு கொடுமுடியில் வாடகை வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் சென்னசமுத்திரம் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த சக்திவேல், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பி ராமலிங்கத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் ஆத்திரத்தில் ராமலிங்கத்தை மம்மட்டியால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்து கிடந்த ராமலிங்கத்தை மறுநாள் பாா்த்த அக்கம்பக்கத்தினா் இது குறித்து கொடுமுடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு சென்ற போலீஸாா், ராமலிங்கத்தை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பிவைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments