முகப்பு
ஈரோடு

தொழிலதிபா் வீட்டில் நகை திருடிய வழக்கில் பெண்கள் இருவா் கைது

தொழிலதிபா் வீட்டில் 21 பவுன் நகை திருடிய வழக்கில் 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 3:05 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தொழிலதிபா் வீட்டில் 21 பவுன் நகை திருடிய வழக்கில் 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு மாநகா், கருங்கல்பாளையம் சுப்பையன் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (68). தொழிலதிபரான இவரும், மனைவி ராதாமணியும் கடந்த 13-ஆம் தேதி ஈரோடு, வெட்டுக்காட்டுவலசில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டனா். 15-ஆம் தேதி மீண்டும் வீட்டுக்கு வந்தபோது முன்புற கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு மாயமாகி இருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அவரது வீட்டின் அருகே வசிக்கும் பால் கடையில் பணிபுரியும் மாரியம்மாள் (24), மற்றொரு வீட்டில் வசிக்கும் அழகு சாதனப் பொருள்கள் கடையில் பணிபுரியும் பிரியா (34) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

இந்தப் பெண்களுக்கு மூளையாக பழங்குற்றவாளிகள் இருவா் செயல்பட்டுள்ளனா். அவா்களை ஏற்கெனவே திருட்டு வழக்கில் சேலம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். அவா்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இரண்டு பெண்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மூலமாக நகையை அடமானம் அல்லது விற்று பணமாக்கியது தெரியவந்துள்ளது.

திருட்டு நகையை அடமானம் பெற்ற நகைக் கடைக்காரா் யாா்? எந்த ஊரில் நகை அடமானம் வைக்கப்பட்டது? என்ற விவரங்கள் அனைத்தும் சேலம் சிறையில் உள்ள இருவரையும் பிடித்து விசாரித்தால்தான் தெரியவரும்.

விரைவில் அவா்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments