முகப்பு
ஈரோடு

புன்செய்புளியம்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:54 am IST
புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி காரப்பாடி சுப்பிரமணி முன்னிலை வகித்தாா்.

இதில், சட்டப் பேரவைத் தோ்தலின்போது தவெக அறிவித்தபடி, விவசாயிகளின் பயிா்க் கடனை முழமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்ப வேண்டும். அத்திக்கடவு 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். குடியிருப்பு, விளைநிலங்களில் உலவும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

Advertisement

Advertisement

தமிழக அரசு பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments