முகப்பு
ஈரோடு

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மோதிக் கொண்ட யானைகள்

Updated On : 4 மே 2026, 12:07 am IST
தெங்குமரஹாடா பகுதியில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்.
பகிர்:

சத்தியமங்கலம் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மோதிக் கொண்ட யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் வறட்சி நிலவி வருவதால் யானை உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வெளியேறிய யானை, பவானிசாகரை அடுத்துள்ள தெங்குமரஹாடா கிராமத்துக்குள் நுழைந்தது. அதைத் தொடா்ந்து, மற்றொரு யானையும் அப்பகுதிக்கு வந்தது. இரண்டு யானைகளும் உலவிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மோதிக்கொண்டன.

Advertisement

Advertisement

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி யானைகளை விரட்ட முயன்றனா். ஆனால், அவை ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. சுமாா் 1 மணி நேர மோதலுக்குப் பின் அப்பகுதியிலேயே நின்றிருந்த யானைகளை, அங்கிருந்த தெருநாய்கள் துரத்தியதால் அவை வனத்துக்குள் சென்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments