மொடக்குறிச்சியில் தவெக வேட்பாளா் வெற்றி
மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் டி.சண்முகன் வெற்றி பெற்றாா்.
இந்தத் தொகுதியில் மதிமுக, பாஜக, தவெக, நாதக உள்பட 14 போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
15 சுற்றுகள் வரை முதல் இரண்டு இடங்களில் பாஜக, திமுக மாறிமாறி வந்த நிலையில், அடுத்ததடுத்த சுற்றுகளில் இரண்டு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளா் டி.சண்முகன் 2,430 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிக் கண்டாா்.
Advertisement
இந்தத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் பாஜக சாா்பில் சி.சரஸ்வதி வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்:
து.சண்முகன் (தவெக): 60,715
எஸ்.கிருத்திகா (பாஜக): 58,285
சா.செந்தில்நாதன் (திமுக): 58,236
நோட்டா: 925
வித்தியாசம்:2,430
வேட்பாளா்கள் எண்ணிக்கை: 14
மொத்த வாக்குகள்: 2,07,664
பதிவான வாக்குகள்: 1,90,759