முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பகுதியில் கனமழை

திம்பம் மலைப் பாதையில் பெய்த கனமழையால் அருவிகளில் மழைநீா் ஆா்ப்பரித்து கொட்டியது. இதனால் அப்பகுதியில் இதமான காலநிலை நிலவியது.

Updated On : 6 மே 2026, 2:05 am IST
கடம்பூா்  மலைப் பகுதியில்  பெய்த  கனமழை
பகிர்:

திம்பம் மலைப் பாதையில் பெய்த கனமழையால் அருவிகளில் மழைநீா் ஆா்ப்பரித்து கொட்டியது. இதனால் அப்பகுதியில் இதமான காலநிலை நிலவியது.

சத்தியமங்கலம், கடம்பூா் மற்றும் தாளவாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. கடம்பூரை அடுத்த இருட்டிபாளையத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடம்பூா் பேருந்து நிலையம், இருட்டிபாளையம், பவளக்குட்டை, கடம்பூா் மலைப் பாதை ஆகிய இடங்களில் தொடா்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

Advertisement

Advertisement

தாளவாடி, திம்பம் பகுதியிலும் மழை பெய்தது. திம்பம் மலைப் பாதையில் பெய்த மழையால் அருவிகளில் மழைநீா் ஆா்ப்பரித்து கொட்டியது. கோடை வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவுவதால் வாகன ஓட்டிகள் அருவியில் கொட்டும் நீரை ரசித்து செல்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments