காா் மோதி தொழிலாளி பலி!
சாலையோரம் நடந்துசென்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.
சாலையோரம் நடந்துசென்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.
ஈரோடு மாநகா், வீரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (45). திருமணம் ஆகாதவா். மர வேலை செய்தவா். ஈரோடு-நசியனுாா் சாலை வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த காா் மோதியதில் பாலசுப்பிரமணியத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக காரை ஓட்டி வந்த வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்த கௌதம் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.