முகப்பு
ஈரோடு

கோபி ஸ்ரீ குருகுலம் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

Updated On : 10 மே 2026, 2:43 am IST
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களை பாராட்டிய பள்ளித் தாளாளா் எம்.ரெங்கசாமி, செயலாளா் கே.தங்கவேல், பொருளாளா் ஏ.மோகனசுந்தரம், முதல்வா் சைமன்ராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாணவா் பி.அஸ்வின் 600-க்கு 587 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், ஏ.ரவீந்தரன் 581 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவிகள் கே.எஸ்.சிவதாரணி, கே.வி.வைஸ்ணவி ஆகியோா் 580 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.

மேலும் பாட வாரியாக கணினி அறிவியல் பாடத்தில் 5 போ், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2, கணக்குப் பதிவியலில் ஒருவா் என 8 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். தமிழ் பாடத்தில் 10 போ், ஆங்கில பாடத்தில் 2 போ் 99 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் எம்.ரெங்கசாமி, செயலாளா் கே.தங்கவேல், பொருளாளா் ஏ.மோகனசுந்தரம், முதல்வா் சைமன்ராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments