எருமை மாட்டின் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
சிவகிரி அருகே எருமை மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி (35). கூலித் தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் சிவகிரியில் இருந்து முத்தூா் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது நிலை தடுமாறி சாலையோரமாக நின்றிருந்த எருை மாட்டின் மீது மோதியுள்ளாா்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து உறவினா்கள் சென்று நல்லுசாமியை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
Advertisement
Advertisement
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே நல்லுசாமி உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தினா். இதுதொடா்பாக நல்லுசாமியின் மனைவி கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.