முகப்பு
நீலகிரி

குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு  அமர்த்தினால் கடும் நடவடிக்கை: தொழிலாளர் துணை ஆணையர் எச்சரிக்கை

உணவகங்கள், தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தினால் கடும் 

Updated On : 25 டிசம்பர் 2018, 5:53 am IST
பகிர்:

உணவகங்கள், தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று    தொழிலாளர் துணை ஆணையர் எச்சரித்துள்ளார்.
   குன்னூர் தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவுப்படி, உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது குறித்த புகாரின்பேரில் அவ்வப்போது  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகையில் சேரிங்கிராஸ், கார்டன் சாலை, இந்து நகர் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தொழிலாளர் நலத் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர். 
   இது குறித்து  அதிகாரிகள் கூறியதாவது:
 தனியார் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தியது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்படும். இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments