முகப்பு
நீலகிரி

மாவட்டத்தில் முதன்முறையாக கண்ணாடி இழை  அதிவேக இணைய சேவை துவக்கம்

நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இணைந்து  கண்ணாடி

Updated On : 25 டிசம்பர் 2018, 5:54 am IST
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இணைந்து  கண்ணாடி இழை  இன்டெர்நெட் சேவையை  திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளது.
பிஎஸ்என்எல்  நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் முரளிதரன் இதைத் தொடங்கிவைத்தார். 
முதல்கட்டமாக  குன்னூர்,  மவுண்ட் பிளசண்ட்  வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பெற்று பயன்பெறலாம்.
அதிவேக இன்டர்நெட் சேவை, 24 மணி நேரம்  இலவச வாய்ஸ் அழைப்புகள் வசதி உள்ளன. இந்த சேவையின் மூலம்  வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள  ஸ்மார்ட் கருவியின் மூலம் வைஃபை வசதி, கண்காணிப்பு கேமராக்களையும்  இயக்க முடியும். 
நீலகிரி மாவட்டத்தின் இதரப் பகுதிகளிலும் படிப்படியாக வெகுவிரைவில் இந்த சேவையை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  கேபிள் டி.வி. 
ஆபரேட்டர்களிடம்  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக   பிஎஸ்என்எல் முதன்மைப் பொதுமேலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments