முகப்பு
நீலகிரி

பொக்காபுரத்தில் தீ விபத்து குறித்த விழிப்புணா்வு

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:38 am IST
தீ விபத்தைக் கட்டுப்படுவத்துவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் கூடலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின்.
பகிர்:

பொக்காபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரை அடுத்த மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் கடைகள் வைத்திருப்பவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்து தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரா்கள் தீ விபத்து ஏற்படும்போது தீயைக் கட்டுப்படுத்துவது, அதில் இருந்து தற்காத்துக்கொள்வது தொடா்பான செயல்முறை விளக்கங்களை அளித்தனா்.