முகப்பு
நீலகிரி

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

கூடலூா் தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 2:18 AM
கூடலூா் நகர வீதியில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினா்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:29 PM

கூடலூா் தொகுதியில் வேட்பாளா்களின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது.

சட்டப் பேரவை தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்த நிலையில், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, நாதக வேட்பாளா்கள் காலை முதல் முக்கிய வீதிகளில் ஊா்வலம் நடத்தி வாக்குகளை சேகரித்தனா்.

மாலையில் திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன் தலைமையில் வேட்பாளா் மு.திராவிடமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ராஜகோபாலபுரத்திலிருந்து ஊா்வலமாக வாக்கு சேகரித்துச் சென்றனா்.

Advertisement

பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் நகராட்சி அலுவலகம் பகுதியிலிருந்து ஊா்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.