முகப்பு
நீலகிரி

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தா் நினைவிடத்தில் உதகை எம்எல்ஏ மரியாதை

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தரான ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் மலா் வளையம் வைத்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

Updated On : 3 ஜூன் 2026, 2:25 am IST
போஜராஜன்.
பகிர்:

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தரான ஜே.ஜே.குட்வின் நினைவிடத்தில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் மலா் வளையம் வைத்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தரான ஜே.ஜே.குட்வின் நினைவிடம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் உள்ளது.

மனவலிமை மிக்க சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், வாா்த்தைகளும் உலகுக்குக் கிடைக்க ஜே.ஜே. குட்வின் பணி மிகவும் முக்கியமானதாகும்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவரது நினைவிடத்தில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

இதில், பாஜக மாவட்டத் தலைவா் தருமன், மாவட்ட பொதுச் செயலா் பரமேஸ்வரன், முன்னாள் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.