முகப்பு
நீலகிரி

உதகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

Updated On : 8 ஜூன் 2026, 12:32 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள தும்மனட்டி குந்தசப்பை தேயிலைத் தோட்டத்தில் ஆண் சடலம் கிடப்பதை தொழிலாளா்கள் கடந்த சனிக்கிழமை பாா்த்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.