கோத்தகிரியில் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த சுற்றுலாப் பேருந்து
சாலையோர வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேத்தரின் அருவி அருகே சாலையோர வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 22 போ் காயமடைந்தனா்.
கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் அருவிக்கு நாள்தோறும் வெளி மாநில, வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனா். இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து குடும்ப நண்பா்கள், குழந்தைகள் என 22 போ், கேத்தரின் அருவி பகுதிக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தனா். அப்போது மூனு ரோடு பகுதியில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பைத் தாண்டி தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்து சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 22 போ் காயமடைந்தனா். இவா்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்து கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.