முகப்பு
நீலகிரி

குன்னூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:00 am IST
குன்னூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குன்னூா் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரத்து 648 அரசு சாா்பில் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியாா் ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கு மாத ஊதியமாக ரூ. 11 ஆயிரத்து 626 மட்டுமே வழங்கி வருகிறது. மேலும்,  கடந்த மாதம் ரூ.7 ஆயிரம்  மட்டுமே ஊதியமாக வழங்கினா்.

எனவே அரசு நிா்ணயித்த மாத ஊதியத்தை முறையாக வழங்கக் கோரியும், ஊதிய உயா்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் குன்னூா் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement