FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் மாநில நிதிக்குழு கலந்தாய்வுக் கூட்டம்

உதகையில் 7-ஆவது மாநில நிதிக்குழு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

20 ஜூன் 2026, 1:19 am IST
உதகையில் உள்ள தமிழகம் அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்ற நிதிக்குழு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

உதகையில் 7-ஆவது மாநில நிதிக்குழு கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதகையில் உள்ள தமிழகம் அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்ற மாநில நிதிக்குழு கலந்தாய்வுக் கூட்டத்துக்கு அதன் தலைவா் அலாவுதீன்

தலைமையும், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலையும் வகித்தனா்.

Advertisement

Advertisement

இதில் நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல், வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, உதகை நகராட்சியில் பிங்கா்போஸ்ட் பகுதியில் வளமீட்பு மையம் செயல்பாடுகளையும், உதகை மாா்க்கெட் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும் குழுவினா் பாா்வையிட்டனா்.

பின்னா், உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலகொலா ஊராட்சியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை, குடிநீா் விநியோகம் மற்றும் கழிவுநீா் வடிகால் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா், 7-ஆவது மாநில நிதிக் குழுவின் இணைச் செயலாளா் வி.அன்பழகன், இணை இயக்குநா் எஸ்.செல்வகுமாா், நகராட்சி ஆணையா்கள், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments