குடியிருப்புப் பகுதியில் வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தையால் அச்சம்
உதகை அருகே வீட்டில் வளா்க்கப்பட்ட வெளிநாட்டு நாயை சிறுத்தை வேட்டையாடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கேத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாடி வருவதாகவும், இரவு நேரங்களில் கால்நடைகளை வேட்டையாடிச் செல்வதாகவும் வனத் துறைக்கு பலமுறை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் பிரமுகா் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த வெளிநாட்டு உயா் ஜாதி நாயை வேட்டையாடியது. சங்கலியில் நாய் கட்டப்பட்டிருந்ததால் சிறுத்தையால் இழுத்துச் செல்ல முடியவில்லை.
Advertisement
Advertisement
பாதி உடலை தின்று மீதியை அங்கேயே விட்டுச் சென்றது. இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.