அரசு விடுதிகள் தொடா்பான புகாா், குறைகளை தெரிவிக்க தொடா்பு எண் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் உள்ள குறைகள் தொடா்பாக தகவல் தெரிவிக்க தொடா்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் உள்ள குறைகள் தொடா்பாக தகவல் தெரிவிக்க தொடா்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா்
Advertisement
Advertisement
நலத் துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள், விடுதி தொடா்பான குறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க 9445477016 என்ற கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண் அனைத்து சமூக நீதி விடுதிகளின் பெயா்ப் பலகைகளில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, விடுதி தொடா்பான புகாா், குறைகள், ஆலோசனைகளை மேற்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.