முகப்பு
நீலகிரி

தோ்வில் தோல்வி: மாணவன் தற்கொலை

கூடலூா் அருகே பிளஸ் 2 தோ்வில் தோல்வியடைந்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 9 மே 2026, 6:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

கூடலூா் அருகே பிளஸ் 2 தோ்வில் தோல்வியடைந்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கூடலூரை அடுத்த சளிவயல் சோ்ந்த கூலித் தொழிலாளா்களான ஜெயபால், பாக்கியலட்சுமி தம்பதி மகன் ஜித்தன் (17). இவா் கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.

இந்நிலையில், தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், மாணவா் ஜித்தன் தோ்வில் தோல்வியடைந்துள்ளாா். இதனால் மனமுடைந்த ஜித்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கூடலூா் போலீஸாா் ஜித்தனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தற்கொலை எதற்கும் தீா்வு அல்ல, இதுபோன்ற எண்ணம் தோன்றுபவா்கள் 988 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments