அரசுப் பள்ளி ஆசிரியையிடம் நகைப் பறிப்பு
அரசுப் பள்ளி ஆசிரியையிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியையிடம் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெருந்துறைச் சேர்ந்த ராமநாதன் மனைவி உமாமகேஸ்வரி (45). இவர், சேவூர் அருகே உள்ள செம்மாம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் பள்ளி முடிந்து சேவூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அவர், அணுகுமடை பிள்ளையார் கோயில் அருகே வந்தபோது தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உமாமகேஸ்வரியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.