உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு
திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
திமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி முழு ஆதரவைத் தெரிவிப்பதுடன், போராட்டத்திலும் பங்கேற்கும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.