முகப்பு
திருப்பூர்

போதையில் தண்ணீரில் விழுந்து இளைஞர் சாவு

வெள்ளக்கோவில் அருகே குடிபோதையில் தண்ணீருக்குள் விழுந்த விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:25 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே குடிபோதையில் தண்ணீருக்குள் விழுந்த விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார்.
வள்ளியிரச்சலைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (32). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. விவசாயத் தோட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால் மதகின் மேல் அமர்ந்து திங்கள்கிழமை மதுபானம் அருந்தி உள்ளார்.
அப்போது போதையில் தவறி தண்ணீரில் விழுந்த அவர் உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments