லாரி திருடியவர் கைது
திருப்பூர் ரயில் நிலையம் அருகே லாரியை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே லாரியை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், அவிநாசி சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இவர், திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள குட்ஷெட்டில் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் குட்ஷெட்டில் லாரியை நிறுத்திவிட்டுச் சென்றார். சற்று நேரத்துக்குப் பிறகு அவர் வந்து பார்த்தபோது லாரியை காணாவில்லை.
இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததன்பேரில் மண்ணரை சோதனைச் சாவடியில் போலீஸார் அந்த லாரியை மடிக்கிப் பிடித்தனர். லாரியை திருடிச் சென்றது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.