முகப்பு
திருப்பூர்

திருப்பூரில்  பன்றிக் காய்ச்சலுக்கு பெண் சாவு

திருப்பூரில்  பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு  பெண்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 5 நவம்பர் 2018, 7:45 am IST
பகிர்:

திருப்பூரில்  பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு  பெண்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், காங்கயம் சாலை புஷ்பா நகர் 4ஆவது வீதியைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி வளர்மதி (55). இவருக்கு கடந்த 15 நாள்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  திருப்பூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வளர்மதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments