பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைக்குசிகிச்சை அளிக்க தாமதம் செய்த அரசு மருத்துவர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைக்கு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைக்கு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூரில் ஏழை பனியன் தொழிலாளியின் 4 வயது மகள் நவம்பர் 1ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் வீட்டில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டு மாடியில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தைக்கு உடனே சிகிச்சை அளிக்கப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கம், மாதர்சங்கத்தினர் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனைக் கண்காணிப்பாளர், இருப்பிட மருத்துவ அலுவலர் ஆகியோரிடம் செல்லிடப்பேசி மூலமாகச் பேசிய பிறகே இரவு 7 மணிக்கு மேல் மருத்துவ சிகிச்சையைத் தொடங்கி உள்ளனர். சிறுமிக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு குறித்து குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அன்றைய தினம் குழந்தைகள் நல அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.
பணியில் இருந்த பெண் மருத்துவர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 15 மணி நேரம் தாமதம் செய்துள்ளார்.
மேலும், குழந்தையின் தாய் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது அவரிடம் அந்த மருத்துவர் மிகக்கடுமையாக நடந்துகொண்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் எண்ணிக்கையையும், மருத்துவ உபகரணங்கள், இதர மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தையிடம் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.