முருங்கைக்காய் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த பல மாதங்களுக்குப் பிறகு நூறு சதவீத விலை ஏற்றம் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த பல மாதங்களுக்குப் பிறகு நூறு சதவீத விலை ஏற்றம் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. தற்போது பூக்கும் பருவமாக இருப்பதால் பெரும்பாலான முருங்கை மரங்களில் காய்கள் கிடையாது.
இதனால், கடந்த சில வாரங்களாக படிப்படியாக வரத்து குறைந்து வருகிறது. கடந்த வாரம் 11 டன் வரத்து இருந்த நிலையில் இந்த வாரம் 5 டன் மட்டுமே கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன.மேலும், தீபாவளி பண்டிகை, சுப விசேஷங்கள் காரணமாக முருங்கைக்காய் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 40, மர முருங்கைக்காய் ரூ.35, கரும்பு முருங்கைக்காய் ரூ. 60 என விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது கடந்த வாரத்தை விட நூறு சதவீத விலை உயர்வாகும்.
கடந்த பல மாதங்களுக்குப் பிறகு அதிக விலை கிடைத்ததால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.