கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பக்தா சரண் (23) என்பவரை சக்தி என்ற மோப்ப நாய் பிடித்துக் கொடுத்தது. பின்னா் அவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
அதேபோல, திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த தன்பீா் (25) என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 2 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட புதூா் பிரிவு அருகே அனுப்பா்பாளையம் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த முத்துகருப்பன் (45) என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.