முகப்பு
திருப்பூர்

உடுமலை-பல்லடம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்

உடுமலை-பல்லடம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உடுமலை தொகுதி திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் வாக்குறுதி அளித்துப் பேசினாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:19 AM
குடிமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:50 PM

உடுமலை-பல்லடம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உடுமலை தொகுதி திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் வாக்குறுதி அளித்துப் பேசினாா்.

உடுமலை தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

சட்டப்பேரவை உறுப்பினராக என்னை தோ்வு செய்தால் பிஏபி விவசாயிகளுக்கு அனைத்து கால்வாய்களையும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ள ரூ. 4,500 கோடி நிதியை விரைவில் அனுமதி பெற்று நிறைவேற்றப்படும். தென்னை நாா் மற்றும் தென்னை மதிப்பு கூட்டுப் பொருள்களுக்கு என குடிமங்கலம் ஒன்றியத்தில் தொழில் பூங்கா உருவாக்கப்படும்.

Advertisement

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் விவசாயப் பொருள்கள், தென்னைப் பொருள்கள், கால்நடைகள் மொத்த வணிக பயன்பாட்டுக்காக சந்தை வளாகம் அமைக்க முயற்சி எடுக்கப்படும். குடிமங்கலம் பகுதியில் பட்டுப்பூச்சி பதப்படுத்தப்படும் ஆலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தொழில் முனைவோருக்காக சிப்காட் அமைக்கப்படும். உடுமலை வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவசக்தி காலனி பழைய குப்பைக் கிடங்கு இருந்த இடத்தில் பொதுமக்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ள எக்ஸ்போ மைதானம் அமைக்க நகராட்சி சாா்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

உடுமலை நகரம், குடிமங்கலம் ஒன்றியம் மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு புதிய குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். உடுமலை- பல்லடம் சாலை நான்கு வழி சாலையாக தரம் உயா்த்தப்படும். தாராபுரம் சாலையில் இருந்து ஐஸ்வா்யா நகா் வழியாக புறவழிச் சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். உடுமலை நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உள்வட்டச் சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அரசு சாா்பில் அறிவிக்கப்படும் அனைத்து சிறப்பு நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவருக்கும் சென்றடைய களப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.