முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் இன்று துணை முதல்வா் உதயநிதி பிரசாரம்

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

Updated On : 17 ஏப்ரல் 2026, 1:33 am IST
உதயநிதி ஸ்டாலின் - யூடியூப் / Udhayanidhi Stalin
பகிர்:

திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தமிழக செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து காங்கயம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறாா்.

இதைத் தொடா்ந்து அவா் அப்பகுதியில் நடைபெறும் சாலைப் பேரணி வாயிலாக வாக்கு சேகரிக்கிறாா் என காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement