முகப்பு
திருப்பூர்

தேசிய அளவிலான கால்பந்து போட்டி: திருப்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் திருப்பூா் மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:07 am IST
திருப்பூா் ரயில் நிலையம் வந்தடைந்த வீரா்களை வரவேற்ற பெற்றோா் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா்.
பகிர்:

தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் திருப்பூா் மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

திருப்பூா் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் புனித ஜோசப் பள்ளி மாணவா்கள் உள்ளடக்கிய வீரபாண்டி அவெஞ்சா்ஸ் அகாதெமியை சோ்ந்த பயிற்சியாளா்களான அருண்பிரகாஷ், திவ்யபாரதி, ஹரிராஜா ஆகியோா் தலைமையில் ஹிமாச்சல் பிரதேச மாநிலம், தா்மசாலாவில் கடந்த ஜூன் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 14-ஆவது தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு 14 வயதுக்கு உட்பட்டோா் பிரிவில் முதலிடம் பெற்று 12 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனா்.

இதனைத் தொடா்ந்து ஜூலை மாதத்தில் நேபாள நாட்டில் நடைபெறும் சா்வதேச அளவிலான கால்பந்து போட்டிக்கு தமிழக மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். போட்டி முடிந்து திருப்பூா் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த வீரா்களுக்கு பெற்றோா் மற்றும் பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement