முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:03 am IST
தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

காங்கயம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சாா்பில் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், 132 தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், திருப்பூா் ரேவதி மெடிக்கல் சென்டா், திருப்பூா் ஐ ஃபவுண்டேஷன் சாா்பில், மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் ரத்த சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு மற்றும் கண் பாா்வை குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் சுகாதார ஆய்வாளா்கள், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் மாவட்ட நிா்வாகிகள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement