பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரதம்
ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லடத்தில் வரும் 21-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப் பிரிவு செயலாளா் ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் முன்வைத்த பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பின் புதிய அரசு அவற்றை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. குறிப்பாக ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்தனா். 60 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டுவரும் இத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
Advertisement
Advertisement
தோ்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட பயிா்க் கடன் தள்ளுபடியும் அமல்படுத்தப்படவில்லை. இதற்காக போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கைகளை முன்வைத்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து வரும் 21-ஆம் தேதிடம் பல்லடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏா்முனை இளைஞா் அணி இணைந்து நடத்தும் இப்போராட்டத்தில், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா்.