முகப்பு
திருப்பூர்

தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On : 18 ஜூன் 2026, 1:24 am IST
நாய் - கோப்புப்படம்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில், கம்பளியம்பட்டி வலசுபாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி (50). இவா் தனது விவசாய நிலத்தில் 50 செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை புதன்கிழமை காலை பாா்த்தபோது, நாய்களால் கடிபட்ட காயங்களுடன் 5 ஆடுகள் இறந்துகிடந்தன. 2 ஆடுகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.