கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது
பல்லடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வாய்க்கால்மேடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவா்களை போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
விசாரணையில், அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜ் கிஷோா் ஜனா (25), நித்தியானந்த பெகரா (23) என்பதும், பல்லடத்தில் தங்கி கஞ்சா, கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சா, கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.